^பேசும் கவிதைகள்^

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அறிவிக்கப் படும் ^படம் பார்த்து கவிதை சொல்லும்^ போட்டியில் கிடைக்கும் அழகான கவிதைகளின் தொகுப்பு.

முதல் போட்டியில் வந்த கவிதைகளுக்கு திரு.ஜ்யோவரம் சுந்தரின் விமர்சனம்.

அந்தப் பதிவில் ரவிஷங்கரின் கவிதையும், முத்துக்குமரனின் கவிதையும் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கின்றன (மண் மீது கரையும் மழைக் கனவுகள் - என்ன அருமையான படிமம்!).

தமிழன் - கறுப்பி, கும்க்கியின் சில வரிகள் பளிச்சிடுகின்றன. மற்றபடி கவிதைகளாக ஆகவில்லை. அஷோக் சொல்ல வருவது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தரையைத் தறை எனக் கவிதையில் எழுதினால் எரிச்சல்தான் வருகிறது :(

4 comments:

ப்ரொபஷனல் கவிஞர்களை விடுங்க.வார்த்தைகளை கோர்த்து அடுக்கத்தெரிந்த ரசவாதம் நமக்கு கை கூடி வரவேண்டுமே...
எழுத எழுதத்தான்.

சென்ஷியை பற்றி?
இருப்பதில் சிறந்தது அதுதானென தோன்றியது எனக்கு மட்டும்தானா?

இல்லை கும்க்கி... எனக்கும் சென்ஷியுடையது தான் மிகவும் பிடித்திருந்தது..

இல்லை, கும்க்கி, எனக்கு அந்த சென்ஷியின் கவிதை பிடிக்கவில்லை. வலுக்கட்டாயமாகக் காதல் கவிதையாக்கியது போல் தோன்றியது.

இன்னொன்று :

/எல்லைகள் தொடுமென்றோ
திரும்பி வருமென்றோ
எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்
தொலையும் அலைகள்
போன்றதே காதலும்!/

இப்படியெல்லாம் காதலென்றால் என்னவென்று கவிதையில் definition போலச் சொல்வது எனக்கு உவப்பில்லை.