^பேசும் கவிதைகள்^

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அறிவிக்கப் படும் ^படம் பார்த்து கவிதை சொல்லும்^ போட்டியில் கிடைக்கும் அழகான கவிதைகளின் தொகுப்பு.


sakthi

இனணயற்ற ஒவியன் பிரம்மன்
எந்த தூரிகை கொண்டு உன்னை
வரைந்தனன் உன் வண்ணம் என்ன‌
வானவில்லில் கடைந்ததோ

நற்றமிழும் அற்றமிழும்
நாணம் கொள்ளும்
நின் அற்புத வதனத்தின்
அழகை பகர இயலாது

ஒவியங்கள் அசைவதில்லை
நீ மட்டும் அசைந்தாடும்
உயிரோவியமாய்!!!!

--

அன்புடன் அருணா

மேகத்தையும்
காற்றையும்
முந்திச் சென்றாய்!!!
நீ!
வேகத்தில் அல்ல....
அழகில்!!!!

--

முத்துகுமரன்

நிறங்களாய்
கடலும் வானும் உறைந்திருக்க
ஈரமண்ணில் தடம் பதித்து
சிறகடித்து சிரிக்கின்றன
பிஞ்சுக் கால்கள்
ஓவியத்திற்கு
உயிர் தெளித்து!!

--

செயபால் said...

ஓடி வரும்
ஓவியமே
துரத்துவது
யாருன்னை

ஓயாத நீரும்
ஒய்யார வானும்
ஓட ஓடத்
துரத்திடுதோ

ஒப்பில்லா
அழகுக்கு
போட்டி நீ
என்றெண்ணி

--

Raju

எனக்கென்று நீ பிறந்தாய்
அலைகடலென ஆர்பரித்தாய்
கண்ணே குதுகளித்தாய்
என் வாழ்வில் வசந்தம் மலரச்செய்தாய்

--

பொடிப்பையன்

மகிழ்வாய் பறக்கிறது ஒரு பஞ்சவர்ணம்
தன் வர்ணமான எதிர்காலத்தை நோக்கி...

--

வெங்கிராஜா

யாழினிது குழலினிது.
மேலும் கீழும்
நீலநிறப் பொறிகள்
ஊன்றிய காலடியின்
அடியில் பற்றிய மணல்
மோனவெளியில் மாயமாக ;
ஓட ஓடத் துரத்தும்
அலையின் நாக்குகளுக்கு
இரையாகும் சுவடுகள் ;
எது குறித்தும் கவலையற்று
என்னை முந்தியோடும்
பிஞ்சின் கொலுசொலிகள்.

---

தமிழ்ப்பிரியா said...

தன்னழகு கொண்டு
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்,
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......

--

$anjaiGandh!

புத்தக பொதி மறக்கும்
அத்துனை நேரங்களும்
ஆனந்த கூத்தாடுவோம்..

--

பொடிப்பையன்
அழகுக்கு அழகு சேர்க்கிறது
நீல வானமும்,
அலையற்ற கடற்கரையும்...
--

கிர்பால்

வானம் கொண்ட நீலம் உண்டு
கடல்கள் உமிழ்கின்றன நிறங்கள் என்று
இராமன் அன்று சொன்னான்!

என்றும்
வானம் கொள்ளும் வண்ணங்கள் யாவும்
சில சின்னக் கைகளின் மந்திரக் கட்டளையாலோ?!

சின்னக் கால்களின் சிறு துள்ளல்கள் கண்டு
மேகக் கூட்டங்களும் கன்னம் சிவப்பதும் உண்டோ?!